ஊடக வெளியீடுகள்

Filter by:
inaugurated

வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். [PDF 74KB]                                 […]

படங்கள் ஏதும்  இல்லை

இந்திய விமானப் படை மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

திண்டுக்கல் மாவட்டம் இந்திய இராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]

Grievance Day

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.1.56 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 63KB]  

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெண்கள் மனமார்ந்த நன்றி.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெண்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். [PDF 364KB]

தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சிய.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மரக்கன்றுகளை நட்டு மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். [PDF 77KB]                              

Census 2027

மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 விழிப்புணர்வு பிரச்சாரம்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 69KB]                    

Solar Awareness Camp

சோலார் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வீட்டு மின் இணைப்புகளுக்கான ”சோலார் விழிப்புணர்வு” முகாமானது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 76KB]  

படங்கள் ஏதும்  இல்லை

நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், புதிரை வண்ணார் நல வாரியம், தூய்மைப் பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

Book Festival

திண்டுக்கல் மாவட்டத்தின் 13-வது புத்தகத் திருவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 13-வது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 77KB]