ஊடக வெளியீடுகள்
மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – ஜூலை 20.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 20.07.2026 நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]
வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 69KB]
குறுவை பருவ பயிர் காப்பீட்டுத் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026திண்டுக்கல் மாவட்டம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 169KB]
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026திண்டுக்கல் மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 72KB] […]
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-க்கான சுய கணக்கெடுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பொது மக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ”சுய கணக்கெடுப்பு” வருகிற 17.07.2026-ஆம் தேதி தொடங்கி 31.07.2026-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 154KB]
5 ஆண்டு கால மீன்பிடி உரிமை குத்தகைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு மற்றும் சின்னப் பெரிய கோம்பை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 73KB]
உலக மக்கள் தொகை தினம் 2026.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026திண்டுக்கல் மாவட்டம் உலக மக்கள் தொகை தினம் 2026-ஐ (ஜுலை 11) முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ரதம், விழிப்புணர்வு பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. [PDF 69KB]
முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக கூடுதல் மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், காணொலிக் காட்சி வாயிலாக, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளின் வளாகத்தில் மொத்தம் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார். [PDF 69KB] […]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026திண்டுக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 90KB]