ஊடக வெளியீடுகள்
வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வோளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியவைகள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.24.25 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். [PDF 67KB]
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு குறித்த ஒத்திகை.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026திண்டுக்கல் மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியானது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 60KB]
தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 61KB]
மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026திண்டுக்கல் மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கான நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு (TET PAPER-I) தொடர்பாக, திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]
துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். [PDF 73KB]
ஒருவார கால அறிமுகப் பயிற்சித் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர்களுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சித் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 60KB]
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.37 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 67KB]
தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், அழகம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் (ஆங்கிலம்) ஆசிரியர் பணியிடத்திற்கும், பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில், இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 49KB]