ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம் – 2026 சேர்க்கை அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2026-ம் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு-2026ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 16.05.2026 முதல் 03.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள Course விவரங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் பற்றி அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. [PDF 228KB]

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 46KB]

Medical College

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடார். [PDF 81KB]

பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

திண்டுக்கல் மாவட்டம் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. [PDF 62KB]

படங்கள் ஏதும்  இல்லை

இலவச வேலைவாய்ப்புப் பதிவு மற்றும் தொடர்புடைய சேவைகள்.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. [PDF 68KB]

Flower Show

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்க்கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்க்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 67KB]

படங்கள் ஏதும்  இல்லை

குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 224KB]

படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்ட ஐ.டி.ஐ-களில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

திண்டுக்கல் மாவட்டம் ஐ.டி.ஐ-களுக்கான – 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 121KB]

படங்கள் ஏதும்  இல்லை

கொடைக்கானலில் 63-ஆவது மலர்க்காட்சி மே 20 முதல் 31 வரை 12 நாட்கள் கோலாகலம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

கோடைகாலத்தில் இளவரசியாம் மலைகளின் கொடைக்கானலின் அழகினை கண்டு களிக்க வருகை புரியும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஆண்டுதோறும் மலர்க்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 63-ஆவது மலர்க்காட்சி வரும் 20.05.2026-ஆம் தேதி முதல் 31.05.2026 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. [PDF 44KB]