ஊடக வெளியீடுகள்
NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 66 KB]
15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்றைய தினம் வரையில் பதிவான 15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 60 KB]
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. [PDF 65 KB]
மே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 அன்று மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026மே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. [ PDF 44KB]
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2026மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.[PDF 55 KB]
வாக்காளர்கள் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வரும்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுடன் (Voter Information Slip) வாக்காளர் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து வாக்களிக்கலாம்.. [PDF 55KB]
வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு 230 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வைப்பறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU, CU, VVPAT) கொண்டு செல்ல ஒதுக்கப்பட்ட 230 வாகனங்களில் இன்று (21.04.2026) ஜி.பி.எஸ் (GPS) கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களின் சுழற்சி முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான தகவல்களை காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.. [PDF 56KB]