ஊடக வெளியீடுகள்
100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 78 KB]
வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எதிர் வரும் 11.04.2026 (சனிக்கிழமை) அன்று பின்வரும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [PDF 70KB]
மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.[PDF 77KB]
பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 57KB]
7 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள்
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 30.03.2026 முதல் வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 30.03.2026 முதல் 06.04.2026 (இன்று) வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விபரம் பின்வருமாறு. [PDF 77KB]
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களுக்காக ஒரு சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக சுற்றுச்சுவர்களில் சுற்றுச்சூழல் மற்றும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவியர்களுக்கு சுவர் ஓவியப் போட்டி நடைபெற்றது. [PDF 64KB]
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – முதல்முறை வாக்காளர்களுக்காக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பாளையங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ.அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். [PDF 74KB] . .
பெற்றோர்கள் கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் பாதுகாப்பற்ற நீர் நிலைகளுக்கு செல்வதை தடுத்திட வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026கோடை விடுமுறையின் போது, பாதுகாப்பற்ற நீர்நிலைகளுக்குச் செல்வதிலிருந்து குழந்தைகள் தடுக்கப்பட வேண்டும். [PDF 57KB]
சட்டமன்றத் தேர்தல் – பெறப்பட்ட வேட்புமனு விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/202630.03.2026 முதல் 04.04.2026 வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விபரம் [PDF 77KB]