ஊடக வெளியீடுகள்
மகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/04/20262026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் அலைபேசி டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி, மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.. [PDF 70KB]
பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDT 58KB]
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் பிந்தைய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆகியோர்களிடம் தபால் வாக்குப்பதிவு பெறுவதற்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று(09.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. [PDF 58KB]
7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் பின்வருமாறு. [PDF 72KB]
மாவட்ட தேர்தல் அலுவலர் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய மொபைல் செயலிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில்,மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘நேயம் (Neyam)’ செயலி மற்றும் தேர்தல் அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘VoteAble’ செயலி ஆகிய இரண்டு புதிய மொபைல் செயலிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.[PDF 77KB]
குறிப்பிட்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிட்டங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது மற்றும் 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அரசு ஆணை எண் (D) 454, உள் (காவல்-XIII) துறை, நாள் 18.03.2026-ன் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் 21.04.2026 முதல் 24.04.2026 வரை மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 வரை மூடப்பட்டிருக்க வேண்டும். [PDF 46KB]
நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 71KB]
100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 78 KB]
வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எதிர் வரும் 11.04.2026 (சனிக்கிழமை) அன்று பின்வரும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [PDF 70KB]