ஊடக வெளியீடுகள்
TNPSC தொகுதி–I முதல்நிலைத் தேர்விற்கான தேர்வுக்கூடங்கள் அமைப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், வருகின்ற 27.09.2026 (ஞாயிற்றுக்கிழமை)-அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–I (தொகுதி–I பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதவுள்ள 5,621 தேர்வாளர்களுக்கென 19 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 81KB]
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மாணாக்கர்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்,பயன்பெறுவதற்கு https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 21.10.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 76KB]
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நடப்பாண்டிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.122.50 இலட்சம் இலக்கீட்டினை எய்துவதற்காகவும் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, தகவல். [PDF 86KB]
இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026ண்டுக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள இடத்தில் வருகின்ற 26.09.2026 அன்று இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]
கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி வருகின்ற 24.09.2025 மற்றும் 25.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 52KB]
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டனூத்து ஊராட்சியிலுள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார். [PDF 90KB] […]
தற்காலிகப் பட்டாசு விற்பனை உரிமம்
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்PDF[63KB]
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 25.09.2026-அன்று ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்PDF[62KB]
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது -2026.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது -2026-க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வருகின்ற 20.10.2026-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 80KB]