மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித் தலைவர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (12.06.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அருகில், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.ர.மலர்க்கொடி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.வெ.ஜெயந்தி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. [PDF 60KB]

மேலும் பல

விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டு மற்றும் தெளிப்பு நீர்பாசனம் அமைத்துத் தரப்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் எக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறைந்த நீரினைக்கொண்டு அதிக மகசூல்பெற நுண்ணீர் பாசனம் அமைத்திட தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் 3000 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. [PDF 59KB]

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

ண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 65KB]

மேலும் பல

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 54KB]

மேலும் பல

நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தென்னம்பட்டி பரமசிவம் நாச்சம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு ரூ.22.14 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.T.சாமிநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். [PDF 74KB]

மேலும் பல

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செய்தி.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

Tதிண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், பழைய ஆயக்குடி, அருள்மிகு விக்னேஷ்வர வகையறா திருக்கோயிலின் உபகோயிலான சிவகிரிப்பட்டி, அருள்மிகு இடும்பன் திருக்கோயிலானது இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது நிலை-3 செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலரால் நிர்வாகம் கவனிக்கப்பட்டு வரப்பெற்றது.. [PDF 71KB]

மேலும் பல

‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ மற்றும் ‘மாவட்டக் கட்டுப்பாட்டு அறை’யினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

திண்டுக்கல் மாவட்டம் பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடும் பொருட்டு செயல்பட்டு வரும் மாவட்ட அளவிலான ‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ மற்றும் ‘மாவட்டக் கட்டுப்பாட்டு அறை’-யினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 62KB]

மேலும் பல

பொது விநியோகத்திட்டத்தின் சேவை.

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக ஜூன்-2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 13.06.2026 (சனிக்கிழமை)-அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. [PDF47KB]

மேலும் பல

அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

திண்டுக்கல் மாவட்டம் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.[PDF 107KB]

மேலும் பல

பழனி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அலங்கார நுழைவு வாயில் மற்றும் நந்தவனத்தை திறந்து வைத்து, திருக்கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். [PDF 55KB]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  [PDF 55KB]

மேலும் பல

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை 08.06.2026(திங்கள்கிழமை) அன்று ஆய்வு செய்ய வருகை புரிந்துள்ள மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் விவேரா ஹோட்டலில் புத்தகம் வழங்கி வரவேற்றார்.  

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் தேவைகளை கேட்டறிந்து, அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். [PDF 59KB]

மேலும் பல

அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் வருகின்ற 08.06.2026-அன்று நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி அவர்கள், […]

மேலும் பல

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி, சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திரு.ஜெகன் (வயது 21) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். [PDF 61KB]

மேலும் பல

கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் நிருவாகத்தின் கீழ் சீர்மரபினர் மாணவர் (ம) மாணவியர்களுக்கு 7 விடுதிகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் நிருவாகத்தின் கீழ் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 7 சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.PDF [63KB]

மேலும் பல

2025–2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

மாவட்ட கலை மன்றம் வாயிலாக சிறந்த கலைஞர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் கலை விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். [PDF 72 KB]

மேலும் பல

ஆவின் நிறுவனத்தின் நேரடி நேர்முகத் தேர்வு (ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் உற்பத்தியை பெருக்கிடவும் மற்றும் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவும் 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர்களை ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு நேர்காணல் மற்றும் நேர்முகத்தேர்வு 15.06.2026 (திங்கள் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் திண்டுக்கல் ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. [PDF 66 KB]

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை — விடுதி விவரங்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நீதி விடுதிகள் (பிவ, மிபிவ/சீம மற்றும் சிறுபான்மையினர்) மாணவர்/மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 50 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. [PDF 71 KB]

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை — கடன் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. [PDF 59 KB]

மேலும் பல

சிறந்த கலைஞர்களுக்கான 2025–2026 கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட கலை மன்றம் வாயிலாக சிறந்த கலைஞர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் கலை விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 71KB]

மேலும் பல

சிறார்களுக்கான கலைப்போட்டி.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான சிறார்களுக்கான கலைப்போட்டிகள் வருகின்ற 21.06.2026-அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 58KB]

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics ) உடல் எடை சீரமைப்பு (Slimming &Weight loss Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. [PDF 52KB]

மேலும் பல

2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

திண்டுக்கல் மாவட்டம் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 62KB]

மேலும் பல

பள்ளிகளில் சத்துணவுத் திட்ட செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

திண்டுக்கல் மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]

மேலும் பல

ரக்ஷா மந்திரி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஹவில்தார்(Havildar) வரை தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களின் சிறார்கள் AY-2025-2026-ஆம் (FY-2026-27) கல்வியாண்டிற்கான மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி(RMDF) கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக. [PDF 62KB]

மேலும் பல

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் 400 பயனாளிகளுக்கு 30 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கிடுமாறு 17.12.2024 நாளிட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டு 400 பயனாளிகளுக்கு 30 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்பட்டது. [PDF 129KB]

மேலும் பல

தமிழக அரசு வழங்கும் இலவச நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

1962 எண்ணை தொடர்பு கொண்டு தமிழக அரசு வழங்கும் இலவச நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். [PDF 50 KB]

மேலும் பல

கால்நடைகளுக்கு 12 இலக்க காதுகுறி எண்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு 12 இலக்க காதுகுறி எண் பதிவு செய்து அதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தை வகுத்துள்ளது.[PDF 47 KB]

மேலும் பல

‘கலெக்டருடன் காபி’ – கல்லூரி மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

‘Coffee with Collector’ – கல்லூரி மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 81KB]

மேலும் பல

பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா மலர்கண்காட்சியை சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா -2026 மற்றும் 63-வது மலர்கண்காட்சியினை மொத்தம் சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

ண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 75KB]

மேலும் பல

போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. [PDF 48KB]

மேலும் பல

திறன் அடிப்படையிலான பயிற்சி.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ, தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. [PDF 51KB]

மேலும் பல

திறன் அடிப்படையிலான பயிற்சி.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, Computer-Aided Design(CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation (Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது. [PDF 60KB]

மேலும் பல

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNCDW), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை (DMMU) அலகிற்குட்பட்ட கீழ்க்காணும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் (BMMU) கிராமபுற பகுதிகளில் காலியாகவுள்ள தற்காலிகப்பணியான சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (Community Bank Co-ordinator) பணியிடத்திற்கு நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [PDF 86KB]

மேலும் பல

இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியம்.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகை ₹25,000-லிருந்து ₹50,000-ஆக தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள் மற்றும் அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [PDF 120KB]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. [PDF 70KB]

மேலும் பல

நத்தம் ஊராட்சி ஒன்றியம் – வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.PDF [58 KB]

மேலும் பல

குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்க்கான சிறப்பு தொழில் கடன் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்க்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறவுள்ளன.PDF [69 KB]

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.PDF [62 KB]

மேலும் பல

மாவட்ட கல்வி ஆய்வு” கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ”மாவட்ட கல்வி ஆய்வு” கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. PDF [53 KB]

மேலும் பல

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 29.05.2026-அன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தகவல். [PDF 61KB]

மேலும் பல

கல்பனா சாவ்லா விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

திண்டுக்கல் மாவட்டம் 2026-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]

மேலும் பல

சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

திண்டுக்கல் மாவட்டம் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]

மேலும் பல

மகளிர் விடுதிகள் இணையதளத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து உரிமம் பெறலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் பணிபுரியும் மகளிர் விடுதிகளை இணையதளத்தில் இ-சேவை மையம் மூலமாக பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 68KB]

மேலும் பல

தற்காலிக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNCDW), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை (DMMU) அலகிற்குட்பட்ட கீழ்க்காணும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் (BMMU) கிராமபுற பகுதிகளில் காலியாகவுள்ள தற்காலிகப்பணியான சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (Community Bank Co-ordinator) பணியிடத்திற்கு நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  [PDF 109KB]

மேலும் பல

2026–2027 கல்வியாண்டு கல்லூரி சேர்க்கைக்காக முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு சார்ந்தோர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இச்சான்றினை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திண்டுக்கல் மூலம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். [PDF 47KB]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 64KB]

மேலும் பல